'+title+'\n' +'\n'+document.getElementById(postid).innerHTML+'\n\n\n' win.document.open(); win.document.write(mytext); win.document.close(); } function AddName(frm) { if (frm.tmpPostBody.value == "") { alert("Please enter some message") return false; } else if (frm.strName.value == "") { alert("Please enter your Name") return false; } else { if(frm.strURL.value != "") frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; else frm.postBody.value = " மணிக்கு " + frm.strName.value + " சொன்னது...\n\n"+ frm.tmpPostBody.value ; return true; } }

முகவரி...

பூவேந்திரன்
புதுவை



முகங்கள்...

பூந்தோட்டம்
புதுக்கவிதைகள்
கவிதைகள்


தொகுப்புகள்

August 2004
September 2004


சில இணைப்புகள்

தமிழ்மன்றம்
வலைப்பதிவரங்கம்
செய்திகள்
கிரிக்கெட்
சினிமா சினிமா
மதுரைத்திட்டம்
சுரதா எழுத்துருமாற்றி
கூகிள் தேடுபொறி
திசைகள்
தமிழ் வலைப்பூக்கள்


பார்வையிட்டோர்

Free Web Counter


நன்றிகள்

Blogger
Blogskins
திரு.சாகரன்
தமிழ்மணம்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது


Friday, September 03, 2004

உருவாகிறார் ஒரு அரசியல்வாதி...

ஐந்து வயதில்

என் பையன் சிங்கம்லா..
ஏ.. கிழவி.. ஒம்பேரன் வளந்து
ஒனக்கு ஊசிப் போடறதுக்குள்ள
உசுரை உட்டுடாத....

பதினைந்து வயதில்

இந்தாடா..
செட்டியாரு கடையில
எட்டணாவுக்கு கணேஷ் பீடி வாங்கியா..
படிக்கனுமா.... கிழிச்ச.. போய் வாங்கியாடா
போக்கத்தவனே...

எங்க கெளம்பிட்டாரு துரை..
ஸ்கூலாவது.. மயிராவது...
போடா.. போய் கபாலியண்ணங்கிட்ட
அப்பன் கேட்டுச்சுண்ணு
நாலு சைக்கிள் டீ(யு)ப் வாங்கியா...

ஏண்டி ராக்கு...
கபாலியை நம்பி எவ்ளோ நாள்...
பையனும் வளந்துட்டான்..
நாமளே காய்ச்சினா இன்னா?!..

இருபத்தைந்து வயதில்

மவனே...
வெள்ளம் கொண்டாந்த
வெள்ளையம்மாளை தொட்டுப்பூட்டயாமே..

அப்புறம் நம்ம ராசு கொழுந்தியாள..
ம்ம்.. சரி சரி..இதையெல்லாம் என் காதுல
உழறாப்போல வைச்சிக்காத...

முப்பத்தைந்து வயதில்


டேய் ..அப்பனுக்கும் வயசாச்சு..
அடுத்தவார ஏலத்தை
ருக்கும் உட்டுடாத..
நம்ம பயலுவல அள்ளிக்கிட்டு போய்
தட்டிக்கிட்டு வந்திடு..
ங்.. ரு பெரச்சிணை பண்ணாலும்
வெட்டிட்டு வந்துடு.. அப்பால பாத்துக்கலாம்..

நாற்பத்தைந்து வயதில்...

ஏ.. ராக்கு..
ஒம்புள்ள இருவதாயிரம் ஓட்டுல
ஜெயிச்சிப்புட்டாண்டி..
ம்ம்.. என்னாடி வாயப்பொளக்கற.
எம்.எல்.ஏன்னா சும்மாவா..
நம்ம பசங்க ஆளுக்கு அம்பது குத்தனானுங்கல்ல..

மவராசனா போய்ட்டு வாடா...
ஆறே மாசத்துல
மந்திரியாவணும் நீ!!!...





posted by Poo at 9/03/2004 10:47:00 AM (Popup)(Show/Hide) 0 comments

கருத்து சொல்லுங்க:

பெயர்:
URL:

யுனிகோட் தமிழ் இல்லையா? கீழே ஆங்கிலத்தில் டைப் அடிங்க மேல யுனிகோட் தமிழுக்கு மாறும். ஆங்கிலத்தில் கருத்து சொல்ல மேலுள்ள பெட்டியில் மட்டும் டைப் அடிங்க

யுனிகோட் தமிழாக்கம் நன்றி: சுரதாவின் பொங்குதமிழ்

~~~*~~~